மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

சென்னை எழும்பூர் - சேலம் ரயில் சேவையில் இன்று மாற்றம்! நாளை காலை புறப்படும்!

சென்னை எழும்பூர் - சேலம் ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 8:49 pm IST

சென்னை எழும்பூரில் இருந்து இன்று (ஆக. 13) இரவு சேலம் செல்ல இருந்த விரைவு ரயில் நாளை (ஆக. 14) காலை புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூர் - சேலம் சந்திப்பு செல்லும் விரைவு ரயில், இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நாளை காலை 7.30 மணிக்கு புறப்படவுள்ளது.

தற்போது, ​​அதன் இணை ரயில் தாமதமாக வருவதன் காரணமாக, அந்த ரயில் நாளை (ஆக. 14) காலை 7.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 7 மணி நேரம் 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் காரணமாக, சேலம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் உள்ளிட்ட சில ரயில்கள் ஆகஸ்ட் 5 முதல் 19-ஆம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

Summary

Southern Railway has announced that the express train scheduled to depart from Chennai Egmore to Salem tonight (Aug. 13) will instead depart tomorrow morning (Aug. 14).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.