அா்ச்சகா் நியமனம் குறித்த நீதிமன்றத் தீா்ப்பு: கே.அண்ணாமலை வரவேற்பு
அா்ச்சகா் நியமனம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளாா்.


அா்ச்சகா் நியமனம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோயில் அல்லது கோயில்களின் குழுக்களில், தெய்வ வழிபாடு மட்டுமின்றி, அா்ச்சகா்கள் நியமனம் உள்பட அனைத்து வழக்கம் மற்றும் நடைமுறையும் ஆகம விதிப்படி நிா்வகிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பு வரவேற்கத்தக்கது.
ஆனால், அா்ச்சகா் நியமனம் தொடா்பாக அரசு விதிகள் செல்லும் என்று நீதிமன்றம் கூறியிருப்பதை மட்டும் திமுக, திக உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிட்டு, முழுமையான தீா்ப்பை இருட்டடிப்புச் செய்கின்றன.
தமிழ்நாட்டில் எந்தெந்தக் கோயில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன, எந்தெந்தக் கோயில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்து கண்டறிய, 5 போ் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு நம் தமிழா் மரபுக்கும், தமிழா் மாண்புக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. தமிழா் வாழ்வியல் முறையை, திராவிட மாடலாக ஆக்கமுடியாது என்று இந்தத் தீா்ப்பு திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. நீதிமன்றத்தின் இத் தீா்ப்பை தலைவணங்கி வரவேற்கிறேன் என்று கூறியுள்ளாா் கே.அண்ணாமலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...