அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தங்கள் ஆட்சி வந்தால் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி எங்களை நேரில் சந்தித்தார், தற்போது முதல்வராக உள்ள அவர், துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், ஆடு மாடுகளை போல சூழ்ச்சி செய்து சுட்டுகொண்டவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். ஆனால், 13 பேரை இழந்தவர்கள் வேதனையுடன் இருக்கிறோம். துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், எத்தனை கோடி இழப்பீடு கிடைத்தாலும் ஈடு செய்ய இயலாது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்த நிதி இதுவரை முறையாக வந்து சேரவில்லை, 13 பேரின் உயிர் போனதோடு மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தின் போது உடலுறுப்புகளை இழந்து இன்றளவிற்கும் மாற்றுத்திறனாளிகளாக துடிக்கும் நபர்களுக்கும் போதிய உதவி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இதனையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என வனிதா கூறினார்.