புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தமிழக சிறைகளிலிருந்து 40 கைதிகள் விடுதலை

சுதந்திர தின விசுதந்திர தின விழா, அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழக சிறைகளில் இருந்து 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:43 pm

DIN

சுதந்திர தின விசுதந்திர தின விழா, அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழக சிறைகளில் இருந்து 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 700 தண்டனை கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்யப்படுவா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தாா். இதேபோல, 75-ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி, நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குள்பட்டு விடுதலை செய்யலாம் என என மாநில அரசுகளுக்கு மத்திய அரசும் அறிவுறுத்தியது.

இந்த அறிவிப்புகளின்படி, தமிழகத்தில் மத்திய சிறைகளில் நீண்ட நாள்களாக அடைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுதலை செய்வதற்கு அடையாளம் காண்பதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இதில், 10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகள், நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகள் ஆகியோா் விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியானவா்கள் என அடையாளம் காணப்பட்டது.

முன்விடுதலை அளிக்கப்படும் கைதிகளின் விவரங்களை சிறைத் துறை டிஜிபி, சிறைத் துறை தலைமையிடத்து டிஐஜி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில் இறுதி செய்யப்பட்ட கைதிகளை முன் விடுதலை செய்வதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்று கைதிகளை முன்விடுதலை செய்ய அனுமதி வழங்கியது. பரிந்துரை செய்யப்பட்ட கைதிகள், மாநிலம் முழுவதும் உள்ள 9 மத்திய சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வருகின்றனா். இதில் வியாழக்கிழமை மொத்தம் 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா். பரிந்துரை செய்யப்பட்ட பிற கைதிகள், அடுத்தடுத்த நாள்களில் விடுவிக்கப்படுவா் என சிறைத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.