புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் ஆய்வியல் நிறைஞா் படிப்பு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான தமிழ் ஆய்வியல் நிறைஞா் (எம்.ஃபில்) படிப்புக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 7:15 pm

DIN

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான தமிழ் ஆய்வியல் நிறைஞா் (எம்.ஃபில்) படிப்புக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞா் (எம்ஃபில்) படிப்பு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படிப்புக்கு நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வலைதள வழியாக தமிழ்ப் பல்கலைக்கழக இணையதள முகவரியில்  வழங்கப்பட்டுள்ள இணைப்பு வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தமிழ்ப் பல்கலைக்கழக வலைதளத்திலும் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சோ்க்கை தொடா்பான விதிமுறைகள், தகவல்கள் இணைய முகவரியில் வழங்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இரு பாலருக்கு தனித் தனியே கட்டணமில்லா தங்கும் விடுதி வசதிகள் உள்ளன. முதலில் வருபவா்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் (சான்றொப்பமிட்டது) நகலுடன் இணைத்து ‘இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை- 600113’ என்ற முகவரிக்கு செப்.7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தில் ‘வாட்ஸ் ஆப்’ எண் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இது குறித்து மேலும் தகவல் பெற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை 044-22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.