உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இரட்டை கோபுரம் இன்று தகர்க்கப்படவுள்ள நிலையில், தற்போது அரை மணி நேர கவுன்டவுன் தொடங்கப்பட்டுள்ளது.
கட்டடத்தின் பல பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள வெடிபொருள்கள் மூலம் பிற்பகல் 2.30 மணிக்கு கட்டடம் முழுவதும் இடிக்கப்படும்.
உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் எமரால்ட் கோா்ட் வளாகத்தில் இரு அடுக்குமாடிக் குடியிருப்புகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்தது. அதை உச்சநீதிமன்றம் விசாரித்த நிலையில், அவ்விரு கட்டடங்களையும் இடித்துத் தள்ள கடந்த ஆண்டு ஆகஸ்டில் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது.
இந்த வழக்கின் முடிவில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வெடிவைத்துத் தரைமட்டமாக்கப்படவுள்ளது. இதற்காக 3,700 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கட்டடம் இடிப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பு கவுன்டன் தொடங்கப்பட்டுள்ளது. கவுன்டவுன் முடிந்து பிற்பகல் 2.30 மணியளவில் கட்டடம் முழுவதும் இடிக்கப்படும்.
பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும், வெளியே இருந்தால் என் -95 முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மாவட்ட மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் வீடுகளிலுள்ள சன்னல், கதவு போன்றவற்றை மூடி வைக்கவும், நீர்த் தேக்கங்கத் தொட்டிகளை மூடி வைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
கட்டடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் 50 அவசர ஊர்திகள் தயார் நிலையில், வைக்கப்பட்டுள்ளன. மேலும் காவல் துறையினருடன், மத்திய பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இறுதி நிமிட சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.30 மணிக்கு வெடி மருந்துகள் இயக்கப்பட்டதும் 9 விநாடிகளில் கட்டடம் முழுவதும் இடிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

‘முத்தமிழறிஞா் கலைஞா் அரங்கம்’: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

வட சென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

