/

சேலம்: குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில் சேதப்படுத்தப்பட்ட கோயில் சிலைகள்

பிரசித்தி பெற்ற சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 7ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2022, 8:30 am

DIN

பிரசித்தி பெற்ற சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 7ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலத்தில் பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலான சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா வரும் ஏழாம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருக்கோயிலில் உள்ள மிகவும் பழமையான சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் சிவன் பார்வதி வேடமணிந்தும், சுமார் 200 பேர் இன்றைய தினம் இது தொடர்பான புகார் மனுவை ஈஸ்வரன் சன்னதியில் அளித்து வேதங்கள் முழங்க ஈஸ்வரனிடம் முறையிட்டனர். 

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களை புதுப்பிக்கும் போது அதன் தொன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் திருத்தளத்தில் இது முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவனடியார்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோயிலில் குடமுழுக்கு நடத்த உள்ள அர்ச்சகர்கள் பலர் போதைக்கு அடிமையாகி உள்ளதாகவும், அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாலும் அவர்களைக் கொண்டு குடமுழக்கு செய்ய கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.