மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஒகேனக்கல் காவிரியில் விநாயகர் சிலைகளை கரைக்க தடை! 

ஒகேனக்கல் காவிரியில் நாளை விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதித்து தருமபுரி ஆட்சியர் சாந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2022, 3:47 pm

ஒகேனக்கல் காவிரியில் நாளை விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதித்து தருமபுரி ஆட்சியர் சாந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக இருந்த நீா்வரத்து திங்கள்கிழமை காலையில் 1.15 லட்சம் கன அடியாகவும், மாலையில் 1.8 லட்சம் கனஅடியாகவும் குறைந்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஆற்றில் நீா்வரத்து அதிகம் இருப்பதால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 4-ஆவது நாளாகவும், ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 49-ஆவது நாளாகவும் திங்கள்கிழமை நீட்டிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நாளை விநாயகர் சிலைகளை கரைக்க தடை விதித்து தருமபுரி ஆட்சியர் சாந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.