கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தி விழா: இஸ்லாமியர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை இஸ்லாமியர்கள் கொண்டாடியுள்ளனர்.


கிருஷ்ணகிரி: மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை இஸ்லாமியர்கள் கொண்டாடியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை சீனிவாச நகரில் நடைபெற்ற விழாவில் சமாதானம், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மிலாடி நபி விழா குழுவின் சார்பில் வாழை, கொய்யா, ஆப்பிள் போன்ற பழவகைகள் மலர்கள் உள்ளிட்ட பூஜை பொருள்களை வழங்கினர்.
இந்த நிகழ்வில் மிலாடி நபி விழா குழுவின் தலைவர் அஸ்லம், வேலுமணி, ரியாஸ், ஜமீர், அஷ்ரப், ஜலீல் பாய், பப்லு, ஜாபர், அப்பாஸ், முன்வர், ரியாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரியில் 12-ஆவது ஆண்டாக இத்தகைய நடவடிக்கைகளில் மிலாடி நபி விழா குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...