மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு: பயிர்கள் நீரில் மூழ்கின

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. 
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர்
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர்

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. 

காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,85,000 கன அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைக்கு வரும் நீர் முழுமையாக நீர் மின் நிலையங்கள் வழியாகவும் உபரி நீர் போக்கி வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

உபரி நீர் போக்கியில் வினாடிக்கு 1,62,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் உபரி நீர் போக்கி கால்வாய் வெள்ளக்காடாக காணப்படுகிறது. சங்கிலி முனியப்பன் கோவில் அருகே மேட்டூர் எடப்பாடி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. போலீசார் வருவாய்த்துறை எச்சரிக்கை மீறி பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடந்துசென்று வருகின்றனர். மேட்டூர் அணை மின் நிலையத்திற்கு சாம்பல் வரும் ஏற்றிச்செல்லும் லாரிகள் அவ்வழியாக செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல அவழியாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. 

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. 

நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 1,85,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1,62,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாத உள்ளது.

தற்போது காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மலை தனிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

உபரி நீர் போக்கி கால்வாய் பகுதியில் அமைந்துள்ள அண்ணா நகர், பெரியார் நகர் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மேட்டூர் வட்டாட்சியர் நேரில் சென்று எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com