எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வடகிழக்குப் பருவமழை 3 சதவீதம் குறைவு: வானிலை ஆய்வுமையம் தகவல்!

வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு 3 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :5 டிசம்பர் 2022, 7:14 am

DIN

வடகிழக்குப் பருவமழை இந்தாண்டு 3 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழை அக்.25-ம் தேதி தொடங்கிய நிலையில், இந்தாண்டு சற்று தாமதமாக அக்.29-ம் தேதி தொடங்கியது. 

இதன்காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சீர்காழி, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருந்தது. 

இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவானதாகவும், இந்தாண்டு அக்டோபர் 1 முதல் டிசம்பர் 5 வரையிலான காலத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைந்துள்ளது. 

டிசம்பர் 5 வரையிலான காலகட்டத்தில் இயல்பான மழையின் அளவு 377.3 மி.மீ ஆகும். ஆனால் இந்தாண்டு இயல்பை விட 3 சதவீதம் குறைவாக 367.1 மி.மீ மழை மட்டுமே பதிவாகியுள்ளது. 

வேலூர், திருவாரூர், அரியலூர், நீலகிரி, நாகை, தூத்துக்குடி, திருச்சி உள்பட 24மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பெய்யுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.