மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சியில் கல்லூரி பேருந்து விபத்து!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

News image

விபத்துக்குள்ளான கல்லூரி பேருந்து

Updated On :7 டிசம்பர் 2022, 6:36 am

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்து, திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அருகே சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் 40 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

இந்த விபத்தில் பெண் பேராசிரியர் ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டையை நோக்கி பேருந்து சென்றபோது, சைக்கிளில் சென்ற இருவர் சைகை ஏதும் காட்டாமல் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளனர். விபத்து நேரக்கூடாது என்று கருதி ஓட்டுநர் கண்ணதாசன், பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்தி சாலை ஓரமாக திருப்பியுள்ளார்.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் அருகே இருந்த மழைநீர் வடிகால் பாலத்தின் கீழ் உள்ள 15 அடி ஆழ பள்ளத்திற்குள் இறங்கியது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி, முகப்பு விளக்கு உள்ளிட்டவை சேதம் அடைந்தன.

இந்த விபத்து குறித்து திருச்சி நவல்பட்டு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.