
தென்காசி மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தென்காசிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணிக்கிறார்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடக்கிவைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (டிச. 8) தென்காசி செல்கிறார்.
இதையொட்டி இன்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 8.40 மணிக்கு புறப்படும் பொதிகை அதிவிரைவு ரயிலில் பயணிக்கவுள்ளார். செங்கோட்டை வரை செல்லும் இந்த ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு தென்காசி சென்றடையும்.
தென்காசியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவிருக்கிறார்.
தென்காசி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர் ரயிலில் பயணம் மேற்கொள்ளவுள்ளதை அடுத்து, எழும்பூர், தென்காசி ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.