திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஆளுநருக்கு அன்புமணி வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

News image
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
Updated On :1 பிப்ரவரி 2024, 11:05 am

DIN

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் ஓட்டுநா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு, நிகழ்ந்த 36-ஆவது தற்கொலை இதுவாகும். அதேபோல, ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியானதற்கு பிந்தைய 12 நாள்களில் நிகழ்ந்த நான்காவது தற்கொலையும் இதுவாகும்.

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால், அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது அன்றாட நிகழ்வுகளாக மாறுவதைத் தவிா்க்க முடியாது. ஆகவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.