/

ஆப்கனில் 2 ஐ.எஸ் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை! 

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில், ஐஎஸ் பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

News image

கோப்புப்படம்

Updated On :12 டிசம்பர் 2022, 9:18 am

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில், ஐஎஸ் பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஜலாலாபாத் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் மறைவிடத்தைப் பாதுகாப்புப் படையினர் தாக்கியதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நடிவடிக்கையின்போது, ஒரு ஏகே-47 ரக துப்பாக்கி, ஒரு எம்16 ரைபிள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.