

மேட்டூ: மேட்டூர் உழவர் சந்தையில் 54 விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
மேட்டூரில் உள்ள உழவர் சந்தைக்கு கொளத்தூர் ஒன்றியம் மேச்சேரி ஒன்றியம் மற்றும் நங்கவள்ளி ஒன்றியங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் விவசாய விலை பொருள்களையும், காய்கறிகளையும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
திங்கள்கிழமை காலை மேட்டூர் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு பழைய அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
இதையும் படிக்க | 10, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு அரசு வேலை: முழு விவரம் இதோ!
விழாவிற்கு வேளாண்மை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து விவசாயிகளுக்கு புதிய அட்டைகளை வழங்கினார். உழவர் சந்தை நிர்வாக அலுவலர் வரவேற்று பேசினார். விழாவில் 43 விவசாயிகளுக்கு பழைய அடையாள அட்டை புதுப்பித்து வழங்கப்பட்டது. புதியதாக விண்ணப்பித்த 14 விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உழவர் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் புதியதாக விண்ணப்பிக்கலாம். தகுதியின் அடிப்படையில் பரிசளித்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று வேளாண்மை துணை இயக்குநர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.