மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 டிசம்பர் 2022, 3:01 am

தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை  வழங்கப்பட்டிருப்பதால், செவ்வாய்க்கிழமை (டிச.13) தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளிக் கட்டடங்களின் நிலைத்தன்மை, பள்ளி வளாகத் தூய்மை, பள்ளியில் உள்ள கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள், மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்தல், மீண்டும் பள்ளி திறக்கப்படும் போது மாணவர்களுக்கு பாதுகாப்பான  கல்வி கற்கும் சூழ்நிலைகளை உறுதி செய்திடும் வகையில்  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிவளாகத்தில் உள்ள பழைய பயன்பாடற்ற பள்ளி கட்டடங்கள்  நிலை குறித்து உயர் அலுவலர்களுக்கு அறிக்கை வழங்கவும் மற்றும் பள்ளி நிர்வாகம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் த.மோகன் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.