தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 21 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.

News image
Updated On :14 டிசம்பர் 2022, 9:28 am

DIN

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 21 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.

இதனால் நேற்று இரவு திறக்கப்பட்ட உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் மீண்டும் மூடப்பட்டன.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தற்போது 21,000 கனஅடியாக சரிந்தது. இன்று காலை 24,100 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து தற்போது 21,600 கனஅடி என்ற அளவில் வந்து கொண்டிருக்கிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக 21,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக 600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.