தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியது:  2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு அணையில்  நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் அணையின் கீழ் பகுதி கரையோரத்தில் வசிக்கும் கேரள மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2022, 5:18 am

DIN

கம்பம்:  முல்லைப் பெரியாறு அணையில்  நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் அணையின் கீழ் பகுதி கரையோரத்தில் வசிக்கும் கேரள மக்களுக்கு பெரியாறு அணை பொறியாளர் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை புதன்கிழமை காலை 6 மணிக்கு அறிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணையில் புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 3.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 2.8 மி.மீ., மழையும் பெய்தது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 1,166.25 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 511 கன அடியாகவும் இருந்தது. அணையில் நீர் இருப்பு 7,396 மில்லியன் கன அடியாக இருந்தது.

ஏற்கனவே கடந்த டிச.3-ல் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது 141 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதை அணையின் நீர் வள ஆதாரத்துறை தேக்கடி பிரிவு உதவி பொறியாளர் பி.ராஜகோபால் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.