தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

'அன்புத் தம்பி உதயநிதிக்கு வாழ்த்துகள்' - ரஜினிகாந்த்

தமிழக அமைச்சராகப் பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :14 டிசம்பர் 2022, 6:44 am

DIN

தமிழக அமைச்சராகப் பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக இன்று(புதன்கிழமை) பதவியேற்றார். 

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் உதயநிதிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணத்துடன், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, தமிழக அமைச்சர்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைச் செயலாளர், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்மூலம் 35 ஆவது அமைச்சராகப் பதவியேற்ற உதயநிதிக்கு இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

அமைச்சராகப் பதவியேற்றுள்ள உதயநிதிக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.