2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி!

தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார். 

News image
Updated On :14 டிசம்பர் 2022, 7:47 am

DIN

தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார். 

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக இன்று(புதன்கிழமை) பதவியேற்றார். 

சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் உதயநிதிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணத்துடன், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, தமிழக அமைச்சர்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைச் செயலாளர், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 

தமிழக அமைச்சரவையில் 35 ஆவது அமைச்சராகப் பதவியேற்ற உதயநிதிக்கு இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

அமைச்சராகப் பதவியேற்றுள்ள உதயநிதிக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

பதவியேற்ற பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் பொறுப்பேற்றுக்கொண்ட உதயநிதி, பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் பலரும் உடனிருந்தனர். 

முன்னதாக, அமைச்சராகப் பதவியேற்றதற்கு முன்னரும் உதயநிதி தனது தந்தையும் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.