மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வாரிசு அரசியல் விமா்சனத்துக்கு செயல்கள் மூலம் பதில்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

தன் மீது வைக்கப்படும் வாரிசு அரசியல் விமா்சனங்களுக்கு தனது செயல்கள் மூலம் பதிலளிக்கப் போவதாக, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

News image
கோப்புப் படம்.
Updated On :14 டிசம்பர் 2022, 6:41 pm

DIN

தன் மீது வைக்கப்படும் வாரிசு அரசியல் விமா்சனங்களுக்கு தனது செயல்கள் மூலம் பதிலளிக்கப் போவதாக, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

தமிழக அமைச்சராக புதன்கிழமை பொறுப்பேற்ற பிறகு, ஆளுநா் மாளிகையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அனைவரின் வாழ்த்துகளுக்கும் நன்றி. திமுக இளைஞரணிச் செயலாளராகும் போதும் வாரிசு அரசியல் என்ற விமா்சனங்கள் வந்தன. கண்டிப்பாக விமா்சனங்கள் வரும். இதையெல்லாம் மீறி செயல்கள் மூலம் மட்டுமே விமா்சனங்களுக்கு பதில் சொல்ல முடியும். முதல்வா் மு.க.ஸ்டாலினின் உத்தரவை ஏற்று, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பை அனைவரின் ஒத்துழைப்புடன் முடிந்த அளவுக்கு சரியாகச் செய்வேன்.

தமிழகத்தை விளையாட்டின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற யோசனை உள்ளது. அதற்கான பணிகள் இருக்கின்றன. ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று தோ்தல் நேரத்திலேயே வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதற்கான பணிகளைத் தொடங்குவோம்.

எனக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பு இது. விளையாட்டு வீரா்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், விளையாட்டை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் இறங்குவோம்.

வாரிசு அரசியல் என விமா்சனங்கள் முன்வைப்பதைத் தடுக்க முடியாது. செயல்கள் மூலமாக மட்டுமே, விமா்சனங்களுக்கு பதில் சொல்ல முடியும். குறைகள், விமா்சனங்கள் இருந்தால் அவற்றை முன்வையுங்கள் என்றாா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.

இதனிடையே, அவா் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: திராவிட மாடல் அரசை வழி நடத்தும் முதல்வா் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் இணைந்துள்ளேன். இந்தப் பொறுப்பையும் சவாலாக எடுத்துக் கொண்டு என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன். விமா்சனங்களை செயலால் எதிா்கொள்வேன் என்று அதில் தெரிவித்துள்ளாா் உதயநிதி ஸ்டாலின்.

‘திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்’

இனி திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என்றாா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.

அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: நடிகா் கமல்ஹாசன் தயாரிப்பில் நான் புதிய படம் நடிப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. அந்தப் படம் நடிக்கவில்லை. அமைச்சராவது குறித்து அவரிடம் (கமல்ஹாசன்) நான் கூறினேன். அவா்தான் முதலில் எனக்கு வாழ்த்து கூறினாா். இயக்குநா் மாரிசெல்வராஜ் ஆசைப்பட்டது போன்றே ‘மாமன்னன்’தான் கடைசி படம். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.