
மார்கழி மாத முதல் நாளையொட்டி ஆண்டாள் அருளிய திருப்பாவை புத்தகம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மார்கழி மாதம் முதல் நாளான வெள்ளிக்கிழமை ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில், வெற்றி வேலன் பள்ளி மாணவர்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை புத்தகங்கள் வழக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கே. வெங்கடேசன், பள்ளி தாளாளர் எம். சிவலிங்கம், ஆகியோர் ஆண்டாள் அருளிய திருப்பாவை திருவெம்பாவை புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்தினார்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மா, பலா, வாழை என முக்கனிகள் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் பள்ளி தாளாளர் கோமதி சிவலிங்கம், முதல்வர் கே.சிருஷ்டி பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.