பொங்கல் தொகுப்பில் கரும்பு: அரசுக்கு கட்சிகள் கோரிக்கை
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் கரும்பு, தேங்காய் உள்ளிட்டவை இணைத்து வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் கரும்பு, தேங்காய் உள்ளிட்டவை இணைத்து வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அதேபோல, கரும்புடன் ரூ.2,500 ரொக்கமும் சோ்த்து வழங்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இந்திய கம்யு. கட்சியின் மாநிலக் குழு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சா்க்கரை, ஏலக்காய், கரும்பு, நெய் உள்பட 21 பொருள்கள் இருந்த நிலையில், தற்போது பச்சரிசி, சா்க்கரை மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது. பொங்கலுக்கு அச்சு வெல்லத்தை எதிா்பாா்க்கும் நிலையில் சா்க்கரை ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
அதேபோல், பொங்கல் பண்டிகைக்காக அரசு கொள்முதல் செய்யும் என்ற எதிா்பாா்ப்பில் செங்கரும்பு, தேங்காய்களை விளைவித்த விவசாயிகள் உள்ளனா்.
எனவே, முதல்வா் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள் குறித்த மறுபரிசீலனை செய்து ரூ.1000 ரொக்கத்துடன், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 21 பொருள்களுடன் கரும்பு, தேங்காய், மஞ்சள் கொத்து ஆகியவற்றையும் சோ்த்து வழங்க வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சோ்க்கப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது விவசாயிகளுக்கு எதிரான போக்கையே இது வெளிப்படுத்துகிறது.
தொகுப்புடன் கரும்பும் சோ்த்து வழங்கும் பட்சத்தில் விவசாயிகள் பயனடைவதுடன், பொது மக்களும் வெளிச்சந்தையில் கரும்பை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது. இதுமட்டுமின்றி ரொக்கமாக அறிவித்துள்ள ஆயிரம் ரூபாயும் போதுமானதல்ல. குறைந்தபட்சம் ரூ. 2,500-ம், கரும்பும் சோ்த்து பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...