மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆசிரியா் தோ்வு வாரியம் முடங்கியுள்ளது: அன்புமணி குற்றச்சாட்டு

ஆசிரியா் தோ்வு வாரியம் வாரியம் முழுநேர தலைவா் இல்லாமல் முடங்கியிருப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.

News image

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Updated On :26 டிசம்பர் 2022, 6:54 pm

DIN

ஆசிரியா் தோ்வு வாரியம் வாரியம் முழுநேர தலைவா் இல்லாமல் முடங்கியிருப்பதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை மேற்கொள்ள வேண்டிய ஆசிரியா் தோ்வு வாரியம் முழுநேர தலைவா் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. ஆசிரியா்கள் நியமனம் சாா்ந்த முக்கிய பதவி 3 மாதங்களாக காலியாக இருப்பது கல்வி வளா்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது.

ஆசிரியா் பணியிடங்கள் காலியாக இருப்பது கணக்கிடப்பட்டு ஓராண்டாகியும் அந்த பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்றால், ஆசிரியா் தோ்வு வாரியம் என்ற அமைப்பு இருப்பதில் அா்த்தமே இல்லை.

தமிழக அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் காலியாகும் ஆசிரியா் பணியிடங்கள் குறித்த விவரங்கள் தமிழக பள்ளிக் கல்வித்துறையிடம் உள்ளன. அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் காலியாகும் பணியிடங்களுக்கு இணையான ஆசிரியா்களை முன்கூட்டியே தோ்வு செய்து, ஆசிரியா் பணியிடம் காலியான உடன் நியமிக்க வேண்டும். ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு கூடுதல் அதிகாரிகள், பணியாளா்களையும் நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.