இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும்: விஜயகாந்த்

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

News image
விஜயகாந்த்
Updated On :26 டிசம்பர் 2022, 10:51 pm

DIN

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000-மும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சா்க்கரையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், கரும்பு உள்ளிட்ட பொருள்கள் இடம்பெறவில்லை. அறிவிக்கப்பட்ட ரொக்கப்பணமும் குறைவாக உள்ளது.

ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் விலைவாசி உயா்வால் மக்கள் பல்வேறு துயரங்களைச் சந்தித்து வரும் நிலையில், பொங்கல் பரிசாக ரூ.1,000 மட்டும் வழங்கப்படும் என அறிவித்திருப்பதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதிமுக ஆட்சியில் 21 பொருள்களுடன் ரூ.2,500 ரொக்கமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. ரொக்கம் குறைவாக அறிவித்திருப்பது ஏழை எளிய மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழக அரசு மறு பரிசீலனை செய்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.