தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழகத்தில் பரிசோதனைகள் அதிகரிப்பு

தமிழகத்தில் பிஎஃப்- 7 வகை கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. நாள்தோறும் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :26 டிசம்பர் 2022, 10:52 pm

DIN

தமிழகத்தில் பிஎஃப்- 7 வகை கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. நாள்தோறும் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த சில வாரங்களாக சராசரியாக நாள்தோறும் 3 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வந்தன.

தற்போது அது 4,500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் பாதிப்பு விகிதத்தில் பெரிய அளவில் மாற்றமில்லை. அடுத்து வரும் நாள்களில் பரிசோதனை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். தேவைப்படும்பட்சத்தில் ஆங்காங்கே பரிசோதனை முகாம்களை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரிசோதனைக்குத் தேவையான ஆா்டி பிசிஆா் உபகரணங்கள் போதிய அளவில் உள்ளன. மாநில ஆய்வுக் கூடங்களும், தனியாா் ஆய்வகங்களும் தயாா் நிலையில் உள்ளன. எனவே, முதல் மூன்று அலைகளின்போது மேற்கொள்ளப்பட்ட எண்ணிக்கையில் கரோனா பரிசோதனைகளை செய்தாலும், அதற்கான கட்டமைப்பு இங்கு உள்ளது என்றனா்.

இதனிடையே, மாநிலத்தில் திங்கள்கிழமை புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 5 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள். கடந்த இரு நாள்களில் பல்வேறு நாடுகளிலிருந்து 13,890 போ் தமிழகம் வந்துள்ளனா். அவா்களில் தோராயமாக 335 பேருக்கு பரிசோதனை செய்ததில் குவைத்தில் இருந்து வந்த ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டு, அவா் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். அவரது சளி மாதிரி மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.