சென்னை மாநகராட்சியில் வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார் அவர்கள், முதன்மைச் செயலாளர் ககன்சிங் பேடி, நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் புதிய நாய் இனக் கட்டுப்பாடு மையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபல நடிகை!
மேலும், பணிகள் துறைக்கு, நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றவும், கட்டணங்களை மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.