பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சு

ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

News image
தமிழக அரசு
Updated On :29 டிசம்பர் 2022, 7:22 am

DIN

ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது.

இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், குடும்பத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் தொடா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் குழுவினருடன் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் முடித்துக் கொள்ளப்படுமா அல்லது போராட்டம் தொடருமா என்பது சற்று நேரத்தில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.