புரட்சிகரமான பேச்சுக்கு ராகுலுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி
நாடாளுமன்றத்தில் புரட்சிகர உரையாற்றிய ராகுல் காந்திக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் புரட்சிகர உரையாற்றிய ராகுல் காந்திக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், இளைஞர்களுக்கு வேலையின்மை, வெளியுறவு கொள்கை தோல்வி உள்ளிட்டவை குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழகத்தை பாஜகவால் ஒருபோது ஆட்சி செய்ய முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க | 'உங்களால் ஒருபோதும் தமிழ்நாட்டை ஆள முடியாது': பாஜகவை விளாசிய ராகுல்
இதுகுறித்து திமுக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
“இன்று (03.02.2022), திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு:
இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நின்றுகொண்டு தமிழ்நாட்டின் தனிச்சிறப்பை, இந்த இனத்தின் பெருமையை மிகச் சிறந்த சொற்களால் இந்திய நாட்டுக்கே அறிவித்த ஆருயிர்ச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்குத் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தனித்தன்மையும் பண்பாடும் அறநெறியும் கொண்ட தமிழ்ப்புலத்தின் பெருமையை அகில இந்தியத் தலைவர்கள் உணரவில்லையே என்றுதான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் வருந்தினார்கள். அக்கவலையைப் போக்கும் வகையில் ராகுல் காந்தி பேச்சு அமைந்துள்ளது.
இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் தமிழ்நெறி செல்லட்டும். சகோதரர் ராகுல் காந்தியின் உரத்த சிந்தனைக்கு உணர்வுப்பூர்வமான நன்றிகள்.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...