பிப். 7 முதல் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். 
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். 

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு ஒரேகட்டமாக பிப்ரவரி 19- ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன்(பிப்.4) நிறைவடைகிறது. கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் கடைசி நாளான இன்று வேட்புமனுத் தாக்கல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். 

தேர்தல் சுற்றுப்பயண விவரம்:

பிப். 7- சிவகாசி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி,

பிப். 8-மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி,

பிப். 10-வேலூர், காஞ்சிபுரம், தாம்பரம், ஆவடி. 

பிப். 11- வடசென்னை, தென் சென்னை, சென்னை புறநகர்

பிப். 14- கோவை, திருப்பூர், ஈரோடு 

பிப். 15 - கும்பகோணம், தஞ்சாவூர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com