தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் கீழ் தினசரி கரோனா பாதிப்பு குறைந்தது.

News image
Updated On :4 பிப்ரவரி 2022, 2:12 pm

DIN

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் கீழ் தினசரி கரோனா பாதிப்பு குறைந்தது.
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று 9,916 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் சென்னையில் 1,475 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 1,224 பேரும், செங்கல்பட்டில் 983 பேரும், திருப்பூரில் 857 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

மற்றொருபுறம் மேலும் 21,435 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு இன்று வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 32 லட்சத்து 04,213-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 55,329 போ் உள்ளதாக சுகாதாரத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 30 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,696-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.