சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வரும் 8ஆம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் வரும் 8ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :5 பிப்ரவரி 2022, 4:12 pm

DIN

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் வரும் 8ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் வரும் 8ஆம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும். சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது.

மக்கள் நலன் சார்ந்த மாணவர் நலனுக்காக சட்டப்பேரவை சிறப்புக்கு கூட்டம் நடத்தப்படுகறிது. இவ்வாறு அவர் கூறினார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து சிறப்புக் கூட்டம் வரும் செவ்வாய்கிழமை கூடுகிறது. 

இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலர் கி.சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 8ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு, சென்னை தலைமைச்செயலத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.