திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் என்ஐஏ விசாரணை தேவை: அண்ணாமலை

சென்னை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை தேவை என பாஜக தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :10 பிப்ரவரி 2022, 6:07 am

DIN


சென்னை: சென்னை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை தேவை என பாஜக தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் அமைந்துள்ளது. புதன்கிழமை நள்ளிரவு அந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அடுத்தடுத்து 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் நந்தனத்தை சேர்ந்த வினோத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், நீட் தேர்வில் பாஜக நிலைபாட்டால் ஆத்திரமடைந்து மது போதையில் பெட்ரோல் குண்டை வினோத் வீசியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பத்தில் உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும். இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும்.

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் நீட் தேர்விற்காக பாஜக அலுவலகத்தில் குண்டு வீசினார் எனக் கூறுவது நகைச்சுவையாக இருப்பதாக தெரிவித்தார்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.