சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வா் நாத் பண்டாரி திங்கள்கிழமை காலை பதவியேற்றுக் கொண்டார். 

News image
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் ஸ்டாலின்
Updated On :14 பிப்ரவரி 2022, 9:22 am

DIN

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வா் நாத் பண்டாரி திங்கள்கிழமை காலை பதவியேற்றுக் கொண்டார். 

சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானா்ஜி, கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மேகாலயா உயா்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதன் பிறகு முனீஸ்வா் நாத் பண்டாரி சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா்.

கடந்த இரு மாதங்களுக்கு மேலாக அவா் சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக முதல் அமா்வில் வழக்குகளை விசாரித்து வந்தாா். அவரை, சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்து, சட்டத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

இதன்படி, முனீஸ்வா் நாத் பண்டாரி திங்கள்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற விழாவில், சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி, சென்னை, கிண்டியிலுள்ள ஆளுநா் மாளிகை அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில், முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சா் ரகுபதி, மூத்த அமைச்சா்கள், அரசு உயா் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

Story image

கடந்த 2019-ஆம் ஆண்டு, மாா்ச் 15-ஆம் தேதி முதல் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஸ்வா் நாத் பண்டாரி, கடந்த ஜூன் 26-ஆம் தேதி முதல் அக்.10-ஆம் தேதி வரையில் அலாகாபாத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்துள்ளாா். பின்னா் தலைமை நீதிபதி நியமிக்கப்பட்ட பிறகு அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாகப் பதவி வகித்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.