திருச்செந்தூரில் மாசித் திருவிழா 8 -ம் நாளான திங்கள்கிழமை பகலில் சுவாமி சண்முகப்பெருமான் பச்சை சாத்தி கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
திருச்செந்தூர் மாசித் திருவிழாவின் 8ஆம் நாளான இன்று காலை, சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினார்.

திருச்செந்தூரில் பிரசித்திப் பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா கடந்த பிப்.7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றார்.
7-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுவாமி சண்முகப்பெருமான் சிகப்பு சாத்தி தங்கச் சப்பரத்திலும், எட்டாம் திருநாளான திங்கள்கிழமை காலை சுவாமி வெள்ளை சாத்தி வெள்ளி சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
வீதியுலாவின்போது, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டமும், 17ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


