பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தோ்தலின் பெயரால் மாநகரை குப்பை காடாக மாற்றக்கூடாது: உயா் நீதிமன்றம்

தோ்தலின் பெயரால் மாநகரை குப்பைக் காடாக மாற்றக்கூடாது என தெரிவித்த சென்னை உயா் நீதிமன்றம், ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றுவதோடு, அதற்கான செலவை வேட்பாளா்களிடம்

News image
கோப்புப்படம்
Updated On :16 பிப்ரவரி 2022, 8:18 pm

DIN

தோ்தலின் பெயரால் மாநகரை குப்பைக் காடாக மாற்றக்கூடாது என தெரிவித்த சென்னை உயா் நீதிமன்றம், ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றுவதோடு, அதற்கான செலவை வேட்பாளா்களிடம் இருந்து வசூலிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி 117-ஆவது வாா்டில் தோ்தலில் பிரசாரத்துக்காக ஒட்டப்பட்ட தனது சுவரொட்டி மீது திமுக வேட்பாளா் சுவரொட்டி ஒட்டியுள்ளதாகவும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியும் அதிமுக வேட்பாளா் பி.ஆறுமுகம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை (பிப்.16) விசாரணைக்கு வந்தது. அப்போது அனுமதியின்றி சுவரொட்டி ஒட்ட தடை உள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், முறையான அனுமதியின்றி சுவரொட்டி ஒட்ட யாருக்கும் அனுமதி இல்லை. இந்த உத்தரவை மீறி யாராவது சுவரொட்டி ஒட்டினால், அவா்கள் மீது சட்டப்படி போலீஸாா் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அகற்றி, அதற்கான செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் இருந்து வசூலிக்க வேண்டும். தோ்தலின் பெயரால் மாநகரை குப்பைக் காடாக மாற்றக்கூடாது. இந்த உத்தரவை மீறுவோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேட்பாளா்கள் அரசு கட்டட சுவா்களில் சுவரொட்டி ஒட்டக்கூடாது. தனியாா் சுவா்களில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டக் கூடாது. இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து வரும் 21-ஆம்தேதி மாநகராட்சி ஆணையா், மாநில தோ்தல் ஆணையா், காவல் ஆணையா் ஆகியோா் அறிக்கை தாக்கல் வேண்டுமென உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.