மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவையை கலவர பூமியாக மாற்ற திமுக முயற்சி: ஓபிஎஸ் - இபிஎஸ் குற்றச்சாட்டு

கோவையைக் கலவர பூமியாக மாற்ற திமுக முயற்சிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் குற்றம்சாட்டியுள்ளனா்.

News image
ஓபிஎஸ் - இபிஎஸ்
Updated On :18 பிப்ரவரி 2022, 6:45 pm

DIN

கோவையைக் கலவர பூமியாக மாற்ற திமுக முயற்சிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் குற்றம்சாட்டியுள்ளனா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா்கள் வெளியிட்ட அறிக்கை:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்துவிட்ட நிலையில், கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜனநாயகத்தை சீா்குலைக்கும் வகையில் பல்வேறு முறைகேடுகளில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா்.

இது தொடா்பாக கோவை மாவட்ட ஆட்சியருக்கும், கோவை மாநகர காவல் ஆணையருக்கும் புகாா் அளித்தும், இது குறித்து காவல் துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இது கண்டனத்துக்குரியது.

சட்டப்பேரவைத் தோ்தலில் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ள நிலையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலிலும் கோவை மாநகராட்சியில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்பதைத் தெரிந்துகொண்டு அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து வரும் கோவை மாநகரத்தை கலவர பூமியாக திமுகவினா் மாற்றி உள்ளனா்.

கரூா் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் கோவை மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டு, அவா்கள் மூலமாக பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்கியும், பொதுமக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தியும், தொடா்ந்து திமுகவினா் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

திமுகவினரின் அராஜக செயல்கள் அனைத்துக்கும் எங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, திமுகவினருக்கு உடந்தையாகச் செயல்படும் அதிகாரிகள் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.