கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

முத்தூரில் வாக்களித்தார் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த பிறந்த ஊரான முத்தூரில் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

News image

முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் காலையிலேயே குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.

Updated On :19 பிப்ரவரி 2022, 11:04 am IST

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த பிறந்த ஊரான முத்தூரில் மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

வெள்ளக்கோவில் நகராட்சி, முத்தூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை முதல் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. 

முத்தூர் பேரூராட்சியில் 15 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கியது.

மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் பிறந்த ஊர் காங்கயம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முத்தூராகும். இவர் முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் காலையிலேயே குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். பின்னர் பேரூராட்சி ஒருசில வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டு கள நிலவரங்களைக் கண்டறிந்தார்.

இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் ஆளும் கட்சி திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.