விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டமிட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
Updated On :21 பிப்ரவரி 2022, 8:25 am

DIN

வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டமிட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும்.

கோவையில் உள்ளாட்சித் தேர்தல் வழக்குப்பதிவின்போது அதிமுகவினர் அத்துமீறி நடந்து கொண்டனர். நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையில் ஈடுபட அதிமுக திட்டமிட்டுள்ளனர்.

ஒரு வார்டுக்கு 100 பேர் வீதம் வாக்கு எண்ணிக்கை மையங்களில் குவிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கோவையில் நடந்த ரகசியக் கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்கும் அதிமுக முயற்சிகளை எதிர்கொள்வதற்கு திமுக முகவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுகவினர் வன்முறையில் இறங்கினாலும் திமுகவினர் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.