பேளூர் பேரூராட்சியில் திமுக–அதிமுக சம பலம்

சேலம் மாவட்டம் பேளூர் முதல் நிலை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக–6, அதிமுக–6, சுயேச்சை–3, ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பேளூர் பேரூராட்சியில் திமுக–அதிமுக சம பலம்

சேலம் மாவட்டம் பேளூர் முதல்நிலை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக–6, அதிமுக–6, சுயேச்சை–3, ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். திமுக, அதிமுக இரு கட்சிகளும் சம பலத்திலுள்ள பேரூராட்சி தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. 

பேளூர் பேரூராட்சியில் வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விபரம்

1வது வார்டு கோவிந்தம்மாள் (திமுக), 2வது வார்டு ப.சம்பத் (அதிமுக), 3வது வார்டு த.சுந்தரம் (சுயேச்சை), 4வது வார்டு ஜெயசெல்வி (திமுக), 5வது வார்டு ச.பரமேஸ்வரி (அதிமுக), 6வது வார்டு பாஞ்சாலை (அதிமுக), 7 வது வார்டு லட்சுமிபிரியா (திமுக), 8 வது வார்டு எச்.அஸ்மா (திமுக), 9வது வார்டு கி. சுரேஷ் (அதிமுக), 10 வது வார்டு வெ.கவிதா (அதிமுக), 11 வது வார்டு சு.வனிதா (சுயேட்சை), 12 வது வார்டு செள.பேபி (திமுக), 13 வது வார்டு வெ.சங்கீதா (அதிமுக), 14 வது வார்டு தினேஷ்காந்த் (திமுக), 15 வது வார்டு பழனியம்மாள் (சுயேட்சை) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

பேளூர் பேரூராட்சியில் திமுக, அதிமுக இரு கட்சிகளும், தலா 6 இடங்களைக் கைப்பற்றியுள்ளதால், 3 சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்று பேரூராட்சி மன்ற தலைவர் பதவியை பிடிக்க இரு கட்சிகளும் முனைப்புக் காட்டி வருகின்றன. இருப்பினும் ஆளும் கட்சியான திமுக, சுயேச்சைகளின் ஆதரவோடு பேளூர் பேரூராட்சியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com