ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இரண்டாவது வழக்கு: ஜெயக்குமாருக்கு மார்ச் 9 வரை நீதிமன்றக் காவல்

இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Updated On :23 பிப்ரவரி 2022, 6:39 am

DIN


இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்த நாளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக 4 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் ஜெயக்குமாரை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றபோது, ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-ஆவது வார்டில் உள்ள சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள வாக்குச்சாவடிக்குள் திமுகவைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் அத்து மீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்து அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் நரேஷைப் பிடித்து, அரை நிர்வாணமாக்கி தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

இது தொடர்பாக நரேஷ் அளித்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீஸார் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.