/

பிப்.27இல் போலியோ சொட்டு மருந்து முகாம்: தமிழக அரசு

கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்.27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:29 am

DIN

கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்.27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக கடந்த 1994 முதல் ஆண்டு தோறும் ஜனவரி மற்றும் மாா்ச் மாதங்களில் இரண்டு தவணைகளாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

தொடா் முயற்சிகள் மூலம் போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்ததைத் தொடா்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சொட்டு மருந்து வழங்கும் புதிய நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நிகழாண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் அதனை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது. தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமாா் 75 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், கரோனா மூன்றாம் அலை நாடு முழுவதும் தீவிரமடைந்த நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால், போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 23-ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.