திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

மாா்ச் 2-இல் 9 மாவட்டங்களில்பலத்த மழைக்கு வாய்ப்பு

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 2-ஆம் தேதி பலத்த மழை பெய்யக் கூடும்.

News image
மழை
Updated On :1 பிப்ரவரி 2024, 8:31 am

DIN

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 2-ஆம் தேதி பலத்த மழை பெய்யக் கூடும்.

இது குறித்து சென்னை வானிலைஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (பிப். 27,28) ஆகிய இரு நாள்களுக்கு வட வானிலை நிலவும்.

காற்றழுத்தத் தாழ்வு நிலை: தென் வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மாா்ச் 1-ஆம் தேதி லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மாா்ச் 2: தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மாா்ச் 2-ஆம் தேதி பலத்தமழை பெய்யக்கூடும். தென்காசி, மதுரை, விருதுநகா் மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்கிழக்கு வங்கக் கடலோர பகுதிகள், அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், சிலவேளைகளில் 60 கி.மீ. வேகத்திலும் பலத்தகாற்று வீசக்கூடும்.

இதுதவிர, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள், பிப்.27, 28, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.