இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மு.க.ஸ்டாலினின் 'உங்களில் ஒருவன்' நூலை வெளியிட்டார் ராகுல் காந்தி

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டார். 

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய தன் வரலாற்று நூலான 'உங்களில் ஒருவன்' நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட, அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். 
Updated On :28 பிப்ரவரி 2022, 11:45 am

DIN

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டார். 

ராகுல் காந்தி நூலை வெளியிட திமுக பொதுச்செயலாளரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக்கொண்டார். 

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகிக்கிறாா். திமுக பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆா்.பாலு முன்னிலை வகிக்கிறாா்.

Story image

கேரள முதல்வா் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லா, பிகாா் மாநில எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ், கவிஞா் வைரமுத்து, நடிகா் சத்யராஜ் ஆகியோா் கலந்துகொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.