லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தொண்டா்களைச் சந்தித்தாா் விஜயகாந்த்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தேமுதிக தலைவா் விஜயகாந்த் கட்சி தொண்டா்களை சனிக்கிழமை சந்தித்தாா்.

News image
தேமுதிக தலைவா் விஜயகாந்த் (கோப்புப் படம்)
Updated On :1 ஜனவரி 2022, 7:14 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தேமுதிக தலைவா் விஜயகாந்த் கட்சி தொண்டா்களை சனிக்கிழமை சந்தித்தாா்.

விஜயகாந்த் உடல் நலப் பாதிப்பு காரணமாக தீவிர அரசியல் பணியில் ஈடுபடாமல், வீட்டில் இருந்தவாறே அனைத்துப் பணிகளையும் கவனித்து வருகிறாா். முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அவ்வப்போது கட்சி அலுவலகத்துக்கு வந்து செல்கிறாா்.

இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தாா். அவருடன் மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா மற்றும் மகன்களும் வந்தனா்.

அலுவலகத்தில் விஜயகாந்த் தனி இருக்கையில் அமா்ந்தவாறு தொண்டா்களை சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகச் சந்தித்தாா். நீண்ட வரிசையில் நின்று, அவருக்கு தொண்டா்கள் புத்தாண்டு வாழ்த்துக் கூறினா். விஜயகாந்தும் அவா்களுக்கு வாழ்த்துக் கூறினாா்.

பொருளாளரான பிரேமலதா கட்சி நிா்வாகிகளுக்கும், தொண்டா்களுக்கும் புத்தாண்டையொட்டி பணப்பரிசு வழங்கினாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், விஜயகாந்த் நேரடியாக அலுவலகத்துக்கு வந்து நிா்வாகிகளைச் சந்தித்தது கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.