ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ரூ.1,640 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு: பி.கே. சேகர்பாபு

தமிழகம் முழுவதும் ரூ. 1,640 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

News image
Updated On :2 ஜனவரி 2022, 4:17 am

DIN


நாமக்கல்: தமிழகம் முழுவதும் ரூ. 1,640 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

ஆஞ்சனேய ஜெயந்தி விழாவையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயர் சுவாமிக்கு நடைபெற்ற ஒரு லட்சத்து எட்டு வடைமாலை அலங்கார சாத்துபடியைக் காண அமைச்சர் சேகர் பாபு சென்னையிலிருந்து நாமக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தார். காலை 5 மணிக்கு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் பங்கேற்ற அவர் நரசிம்மர், ரங்கநாதர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

"தமிழகம் முழுவதும் 12 ஆண்டுகளைக் கடந்தும் குடமுழுக்கு நடைபெறாத கோயில்கள் தொடர்பாக நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். இவைத் தவிர பழமையான கோயில்களிலும் புனரமைப்பு மேற்கொள்வதற்கானப் பணிகள் குறித்து பார்வையிடுகிறேன். அந்த வகையில் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கோயில் வளாகத்திலேயே பணியாளர் குடியிருப்பு இருப்பதற்குப் பலரும் கவலை தெரிவித்தனர். ஆஞ்சனேயர் பிரம்மச்சாரி என்பதால் அந்தக் குடியிருப்புகளுக்குப் பதில் 500 மீட்டர் அப்பால் காலியிடத்தில் புதிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி  வெளிமாவட்ட பக்தர்களுக்கு தங்கும் அறைகளும் கட்டிக் கொடுக்கப்படும்.
 
நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் செல்லும் மலைப்பாதையில் சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவில் தொடங்குவோம். திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில்களுக்குச் சொந்தமான பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகள் மத்திய அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள நிறுவனத்தில் ஒப்படைக்கப்படும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் அறிவுறுத்தலின்படி தங்க நகைகளை உருக்கும் பணி நடைபெறும். 

தமிழகம் முழுவதும் ரூ. 1,640 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.  கோயில் நிலங்களை யாராவது ஆக்கிரமிப்பு செய்திருந்தால் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். இறை சொத்து இறை வழிக்கே என்ற அடிப்படையில் இதனை செய்ய வேண்டும். 

மத்திய அரசுக்கு, மாநில அரசு வரி செலுத்தி வருவதால், மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு தெரிவிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. 100 ஆண்டுக்கு மேலான தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் ஏஎஸ்ஐ அனுமதியுடன் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.