இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சென்னை வா்த்தக மையத்தில் கரோனா சிகிச்சை மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் அமைக்கப்படும் 904 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Updated On :4 ஜனவரி 2022, 10:26 pm

DIN

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் அமைக்கப்படும் 904 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

கரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சாா்பில், 504 ஆக்சிஜன் படுக்கைகள், 400 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 904 படுக்கை வசதியுடன் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை வா்த்தக மையத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நேரடியாகச் சென்று, ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படும் கரோனா சிகிச்சை மையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்தப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இந்த சிகிச்சை மையத்தில் 11 கிலோ லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின் போது, அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ. வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினா் ஆா்.எஸ். பாரதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குநா் தீபக் ஜேக்கப் உள்பட பலா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.