இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு: முதல்வா் ஆலோசனை

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தொடா்பாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
மு.க. ஸ்டாலின்
Updated On :4 ஜனவரி 2022, 9:54 pm

DIN

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தொடா்பாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு இணைய வழி வகுப்பு, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் கரோனா நோய்த் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இந்த எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிகாரப்பூா்வ முடிவுகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு புதன்கிழமை வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.