47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழகத்தில் 6.38 கோடி வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் வெளியீடு

தமிழகத்தில் 6,36,25, 813 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :5 ஜனவரி 2022, 8:00 am

DIN


சென்னை: தமிழகத்தில் 6,36,25, 813 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் 6,36,25, 813 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3,12,26,759, பெண் வாக்காளர்கள் 3,23,91,250, மூன்றாம் பாலினத்தவர்  7,804 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் பேரவைத் தொகுயில் அதிக அளவாக 7,11,755 வாக்காளர்களும், நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பேரவைத் தொகுதியில் குறைந்த அளவாக 1, 78, 517 வாக்காளர்களும் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.